என்னைப் பற்றி

எனது படம்
இஸ்பஹான் சாப்தீன் பிறப்பு: 1987.03.28 ஊர்: கட்டுகொடை மாவட்டம்: காலி நாடு: இலங்கை பாடசாலை; உஸ்வதுன் ஹஸனா ம.வி பல்கலைக்கழகம்: பேரதனை பல்கலைக்கழகம் முதல் கவிதை; தினகரனில் வெளியாகியது

புதன், 3 அக்டோபர், 2012

பெண்=முரண்

தீயை மூட்டவும்
ஊதுகிறாய்..!


தீயை அணைக்கவும்
ஊதுகிறாய்..!


எப்படி
ஒரே காற்றால்
முரண் செயல்
செய்கிறாய்..?




நான்
ஏற்றுக் கொள்கிறேன்
நீ விசித்திரமானவள் தான்.


இஸ்பஹான் சாப்தீன்.
 

திங்கள், 18 ஜூன், 2012

நினைவு

ஒரு பின் மாலைப் பொழுது...
மரங்களின் நடுவே மண்பாதை...
மேனி தழுவும் மென் காற்று...
தூரத்துப் பனிச்சாரல்...
மங்களாய் ஒரு பெட்டிக் கடை...
எங்கோ கசியும் மெல்லிசை...
மலையோர மண்வாசம்...
தனியாய் நடக்கிறேன்...
நினைவுகளோடு நான்!


இஸ்பஹான் சாப்தீன்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

பதவி

குழப்படியான
பையனை
வகுப்புத் தலைவனாக்கி
அடக்கி வைக்கும்
யுக்தியை
எங்கேயடி கற்றாய்..?


'காதலன்'
பதவி தந்து
என்னை
அடக்கிவிட்டாயே!


இஸ்பஹான் சாப்தீன்.2012.06.03

காதலுக்காக...!

காதல்...!
கடும் சூராவளியின்
பின் வரும்
மெல்லிய அமைதி!



உன்னோடு
சண்டையிட்டுப் பிரிந்து
சில கணங்களில்
அது வருகிறது!



வா சண்டையிடுவோம்
காதலுக்காக...!


கவிஞர் இஸ்பஹான் சாப்தீன்
2012.06.03

புதன், 25 ஏப்ரல், 2012

காதலன்.

உன் தலைகோதி
விடைபெறத் திரும்புகையில்
மீண்டும் என் கைபற்றி
பூமி பார்த்து மௌனிப்பாயே..!
அத் தருணங்களில்...

அன்பே..
நான் புதுக் காதலனாக
மாறி விடுகிறேன்.

புதன், 7 மார்ச், 2012

கண்கள்

உன் கண்கள்
என்ன மழை முகிழா?
மின்னல் வெட்டி விட்டு
மழையும் பெய்கிறது.

சனி, 25 பிப்ரவரி, 2012

ஒரு வர்த்தி ஒளி,

ஒரு வர்த்தி ஒளி,
ஒரு மூக்குக் கண்ணாடி,
ஒரு பேனை,
ஒரு வெள்ளைக் காகிதம்,
நிசப்தமான அறை,
யன்னலோர சாய்வு நாற்காலி,
ஏகாந்தப் பெருவெளி,
இருள் கப்பிய வானம்,
மிருகக் கண்களாய் நட்சஸ்திரம்,
அணைக்கத் துடித்தபடி
உன் நினைவுகள்.
இது என் அழகிய 'கவிதை'!