என்னைப் பற்றி

எனது படம்
இஸ்பஹான் சாப்தீன் பிறப்பு: 1987.03.28 ஊர்: கட்டுகொடை மாவட்டம்: காலி நாடு: இலங்கை பாடசாலை; உஸ்வதுன் ஹஸனா ம.வி பல்கலைக்கழகம்: பேரதனை பல்கலைக்கழகம் முதல் கவிதை; தினகரனில் வெளியாகியது

புதன், 21 செப்டம்பர், 2011

கனவே என் காதலி

விடுதியில்
அதிகம் தூங்குபவன் நான்.

நண்பன் ஏசிக்கொண்டே இருப்பான்.
அவனுக்குத் தெரியாது
என் காதலி
கனவென்று.

நீ என் கவிதை


நீ புரியாத புதிர்
இருப்பினும்
முடிந்தளவு
என் கவிதைகளை
இலகுபடுத்துகிறேன்.


நீ தான்..!

என் இடிந்த
எண்ணக் கோட்டை

உன் பேனை செதுக்கிய
ஒரு தாள் வெட்டு

உன் மனம் திறந்த
ஒரு ஓலைச் சுவடி

உன்னாலான சில
சில்லறை நினைவுகள்

புதையுண்ட சின்னச்
சின்னக் கனவுகள்

என் இதய தேசத்தின்
பூர்வீகக் குடி
நீ தான் என்பதை
நீருபித்துவிட்டது சகியே..!