என்னைப் பற்றி

எனது படம்
இஸ்பஹான் சாப்தீன் பிறப்பு: 1987.03.28 ஊர்: கட்டுகொடை மாவட்டம்: காலி நாடு: இலங்கை பாடசாலை; உஸ்வதுன் ஹஸனா ம.வி பல்கலைக்கழகம்: பேரதனை பல்கலைக்கழகம் முதல் கவிதை; தினகரனில் வெளியாகியது

திங்கள், 27 ஜூன், 2011

காலை காட்சி.

இரவுடையில் நீ
சோம்பல்
முறிப்பதைக் காணவே
அலாரம் வைத்து
விழிக்கிறேன்
அதிகாலையில்...

உன் நினைவு

எனக்கு
டயரி எழுத
முடியவில்லை,
நேரம் தெரியாமல்
வருகிறது
உன் நினைவு

உன் நிழல் நான்.

சிதைந்தாலும்
தொடர்வேன்
உன் முப்பரிமாண
நிழல் நான்.

அருகில் இருக்கும் தூரம்.

நமக்குள்
ஆயிரம் உறவுகள்
ஆயினும்,
தண்டவாளங்களாய்
பிரிந்தே இருக்கிறோம்

பூப்பெய்திய கவிதை.


என் முதல்
கவிதையிலேயே
நீ பூப்பெய்திவிட்டாய்
எத்தனை விழிகள்
மௌய்க்கின்றன பார்.

தேவதை.

isbahan
கண் மூடி
தேவதைக் கதை
கேட்கும் போதெல்லாம்
இரவுடையில்
நீ தோன்றுகிறாய்...

என்றும் நீ காதலி...



நீ காதலியாகவே
இருக்க வேண்டுமென்றால்
நம் காதல்
கைகூடக்கூடாது.

தட்டாதே!

My heart door
தட்டாதே
திறந்திருக்கிறது!
இது ஏசு நாதரின் கதவல்ல
என் இதயக் கதவு
நீ வரலாம்
போக முடியாது.

ஞாயிறு, 26 ஜூன், 2011

காதல் ரோஜா.

விருப்பத்தோடு
ஒற்றை ரோஜா
கொண்டு வந்தேன்

வாங்க மறுத்துவிட்டாய்,

விருப்பமின்றி
கற்றை ரோஜா
கொண்டு வந்தேன்

மறுக்காது வாங்கிக்கொள்கிறாய்
கல்லரையில் இருந்தபடி...

சனி, 25 ஜூன், 2011

வாசம்.

Isbahan 
மலர்
மனம்
இரண்டிலும் உன் வாசம்.


ஒன்றில் நீ
வாசம் வீசுகிறாய்..
மற்றதில் நீ
வாசம் செய்கிறாய்..

வெள்ளி, 24 ஜூன், 2011

இதுவும் மரணம்.

தூக்கம்
கொஞ்ச நேர மரணம்.
காதல்
கொஞ்சம்
கொஞ்சமாய் நேரும்
மரணம்.

வியாழன், 23 ஜூன், 2011

அணை..!

கவிஞர் இஸ்பஹான்
உன்
நெறுக்கம் குறைவதும்
என்னை
நெருப்புச் சுடுவதும்
ஒன்றுதான்.
...
நெறுங்கி வந்து
எப்போது அணைப்பாய்
என்னை?
மன்னிக்க வேண்டும்
நெருப்பை?


2011.05.27
கவிஞர் இஸ்பஹான்.