என்னைப் பற்றி

எனது படம்
இஸ்பஹான் சாப்தீன் பிறப்பு: 1987.03.28 ஊர்: கட்டுகொடை மாவட்டம்: காலி நாடு: இலங்கை பாடசாலை; உஸ்வதுன் ஹஸனா ம.வி பல்கலைக்கழகம்: பேரதனை பல்கலைக்கழகம் முதல் கவிதை; தினகரனில் வெளியாகியது

புதன், 21 செப்டம்பர், 2011

கனவே என் காதலி

விடுதியில்
அதிகம் தூங்குபவன் நான்.

நண்பன் ஏசிக்கொண்டே இருப்பான்.
அவனுக்குத் தெரியாது
என் காதலி
கனவென்று.

நீ என் கவிதை


நீ புரியாத புதிர்
இருப்பினும்
முடிந்தளவு
என் கவிதைகளை
இலகுபடுத்துகிறேன்.


நீ தான்..!

என் இடிந்த
எண்ணக் கோட்டை

உன் பேனை செதுக்கிய
ஒரு தாள் வெட்டு

உன் மனம் திறந்த
ஒரு ஓலைச் சுவடி

உன்னாலான சில
சில்லறை நினைவுகள்

புதையுண்ட சின்னச்
சின்னக் கனவுகள்

என் இதய தேசத்தின்
பூர்வீகக் குடி
நீ தான் என்பதை
நீருபித்துவிட்டது சகியே..!

திங்கள், 27 ஜூன், 2011

காலை காட்சி.

இரவுடையில் நீ
சோம்பல்
முறிப்பதைக் காணவே
அலாரம் வைத்து
விழிக்கிறேன்
அதிகாலையில்...

உன் நினைவு

எனக்கு
டயரி எழுத
முடியவில்லை,
நேரம் தெரியாமல்
வருகிறது
உன் நினைவு

உன் நிழல் நான்.

சிதைந்தாலும்
தொடர்வேன்
உன் முப்பரிமாண
நிழல் நான்.

அருகில் இருக்கும் தூரம்.

நமக்குள்
ஆயிரம் உறவுகள்
ஆயினும்,
தண்டவாளங்களாய்
பிரிந்தே இருக்கிறோம்

பூப்பெய்திய கவிதை.


என் முதல்
கவிதையிலேயே
நீ பூப்பெய்திவிட்டாய்
எத்தனை விழிகள்
மௌய்க்கின்றன பார்.

தேவதை.

isbahan
கண் மூடி
தேவதைக் கதை
கேட்கும் போதெல்லாம்
இரவுடையில்
நீ தோன்றுகிறாய்...

என்றும் நீ காதலி...



நீ காதலியாகவே
இருக்க வேண்டுமென்றால்
நம் காதல்
கைகூடக்கூடாது.

தட்டாதே!

My heart door
தட்டாதே
திறந்திருக்கிறது!
இது ஏசு நாதரின் கதவல்ல
என் இதயக் கதவு
நீ வரலாம்
போக முடியாது.

ஞாயிறு, 26 ஜூன், 2011

காதல் ரோஜா.

விருப்பத்தோடு
ஒற்றை ரோஜா
கொண்டு வந்தேன்

வாங்க மறுத்துவிட்டாய்,

விருப்பமின்றி
கற்றை ரோஜா
கொண்டு வந்தேன்

மறுக்காது வாங்கிக்கொள்கிறாய்
கல்லரையில் இருந்தபடி...

சனி, 25 ஜூன், 2011

வாசம்.

Isbahan 
மலர்
மனம்
இரண்டிலும் உன் வாசம்.


ஒன்றில் நீ
வாசம் வீசுகிறாய்..
மற்றதில் நீ
வாசம் செய்கிறாய்..

வெள்ளி, 24 ஜூன், 2011

இதுவும் மரணம்.

தூக்கம்
கொஞ்ச நேர மரணம்.
காதல்
கொஞ்சம்
கொஞ்சமாய் நேரும்
மரணம்.

வியாழன், 23 ஜூன், 2011

அணை..!

கவிஞர் இஸ்பஹான்
உன்
நெறுக்கம் குறைவதும்
என்னை
நெருப்புச் சுடுவதும்
ஒன்றுதான்.
...
நெறுங்கி வந்து
எப்போது அணைப்பாய்
என்னை?
மன்னிக்க வேண்டும்
நெருப்பை?


2011.05.27
கவிஞர் இஸ்பஹான்.

சனி, 19 மார்ச், 2011

கனவில் வாழ்தல்


கனவுகளின் திரட்ச்சி
நனவாகலாம்...
கனவு காணுங்கள்!

நினைத்தபடி வாழலாம்
 வாழ்ந்து பார்க்கலாம்....
கனவிலேனும்...

வெள்ளி, 18 மார்ச், 2011

வாழ்க்கை காயங்களின் காயம்.


வாழ்க்கை என்பது
புல்லாங்குழல் போல்
காயங்கள் நிறைந்தது தான்.
காயங்களை மறைக்கின்ற போது தானே
ராகங்கள் பிறக்கின்றன.

துன்பங்களின் ராச்சியம்

அழகானது வாழ்க்கை.

இஸ்பஹான்
வாழ்க்கை அழகானது
மற்றவர்களுக்காகவும்
வாழ்ந்தால்.......

சீராக வாழ்தல்.


நான் மனிதர்களை
வாசிக்கிறேன்
புத்தகங்களோடு
பழகுகிறேன்...!

Isbahan Sharfdeen

இது என் அழகிய வாழ்க்கை.......!


இது என் அழகிய வாழ்க்கை.......!
ஒரு நாள்.....,
கண் திறந்தேன்;
எல்லோரும் மகிழ்ச்சியாக சிரித்தார்கள்;
நான் மட்டும் அழுதேன்.

ஒரு நாள்.....,
கண் மூடுவேன்;
எல்லோரும் சோகமாக அழுவார்கள்;
நான் மட்டும் சிரிப்பேன்.




(அல்லாஹ் என் மீது அன்புள்ளவன்)

பெண் - முரண் தொடைக் கவிதை.

isbahan@gmail.com


பெண்....!
விசித்திரமானவள்.
அன்பை அள்ளி வழங்குபவளும் அவள் தான்.
அன்புக்காய் ஏங்குபவளும் அவள் தான்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

உன் வாழ்க்கைக்கு அங்கீகாரம்.

நான்=நீ 
நீ சொல்வது சரி
ஆனால், 
நான்  சொல்வது பிழையல்ல
 நீ சொல்வது பிழையல்ல
ஆனால், நான்  சொல்வதும் சரி!

சனி, 12 மார்ச், 2011

நானாகவும் வாழ வேண்டும்.


நீங்கள்
எதை வேண்டுமானாலும்
பேசலாம்....
எல்லாவற்றையும்
நான் கேட்பேன்.
Isbahan Sharfdeen

நீங்கள்
எதை வேண்டுமானாலும்
சொல்லலாம்....
ஆனால்,
எல்லாவற்றையும்
என்னால் செய்ய முடியாது.